Perambalur: Free medical camp at Nilan Diabetes Clinic! More than 150 people participated!
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள நிலன் நீரிழிவு சிகிச்சையகத்தில், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் நீரிழிவு (சர்க்கரை) நோய் நிபுணர் டாக்டர் லக்ஷிகா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, HbA1c, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பெரம்பலூர், துறைமங்கலம், வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், அரணாரை, நொச்சியம், செஞ்சேரி, விளாமுத்தூர், நெடுவாசல், கவுள்பாளையம், எளம்பலூர், வடக்குமாதவி, வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர். முகாமிற்கான ஒருங்கிணைப்பு நிலன் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.