Perambalur: Gas consumer grievance redressal meeting; Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள் மீது வரப்பெற்ற புகார் மனுக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுத்து, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.10.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் பெரம்பலூர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு நுகர்வோர்கள் எரிவுாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் மேற்படி, கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என்றும், எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.