Perambalur: Gas cylinder explodes at tea shop; 12 people, including a schoolgirl, suffer burns!

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாச்சலம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று மாலை டீக்கடையில் இருந்து கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வழியில் சென்றுக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி ஒருவர் உள்பட 13 பேர் மீது தீப்பற்றியது. இதைக்கண்டவர்கள் தீயணைத்து அவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயணைத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 பைக்குகள் தீப்பற்றி எரிந்து சேதமானது. இத்தீவிபத்தால் சற்று நேரம் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது. அரசு மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரளி கிராமத்தை சேர்ந்த மித்ராஸ்ரீ என்ற பள்ளி மாணவி முதலுதவி சிகிச்சை அளிக்ப்பபட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அண்ணாமலையார் டீக்கடையில் இன்று மாலை 4.30 மணியளவில் கேஸ் சிலிண்டரின் அடிப்பாகம் சேதமடைந்து சிலிண்டரில் இருந்து வெளிவந்த கேஸ் தீப்பற்றி டீக்கடையை சுற்றி சுமார் 10 மீட்டர் தீ ஜுவாலை பரவியது. இதில், கடையில் இருந்தவர்கள் அவ்வழியே சென்றவர்கள் என 2 பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தவர்கள் விவரம்:

களரம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜயகுமார் (47), ரஞ்சன்குடியை சேர்ந்த அல்லாஹ் பாஷா மகன் அமீர்கான் (51), கடையில் வேலை செய்த பெரம்பலூர் குறிஞ்சி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி புவனேஸ்வரி (32), பெரம்பலூர் ரங்கா நகரை சேர்ந்த ராஜ் முஹம்மது மகன் அப்துல் ரகுமான் (35), மற்றும் முத்துக்ருப்பன் மகன் சகாதேவன் (53),பெரம்பலூர் அசோக் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமார் (52), பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த காமராஜ் (63), வடக்கு மாதேவி ஏரிக்கரை ஆண்டி மகன் பழனிசாமி (52),கடையின் டீ மாஸ்டரான சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்(33), பொம்மனபாடியை சேர்ந்த மாரிக்கண்ணு மகன் மணிகண்டன் (42), பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவியான பேரளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் மித்ராஸ்ரீ (14), பெரம்பலூர் ஔவையார் தெருவை சேர்ந்த நல்லு மகன் சிவப்பிரகாசம் (58), கொட்டரை சேர்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (50) ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!