Perambalur: Congress party members hold a rally and protest demanding the rejection of the constituency delimitation.

மோடி தலைமையிலான மத்திய அரசு அவசரமாக நியாயமற்ற முறையில் தொகுதி மறுவரையறை செய்துள்ளதாகவும், பழைய முறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், பிற அமைப்புகள், கட்சிகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடந்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் ரோவர் சிக்னல் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியை மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். பேரணி காமராஜர் சிக்னல் வழியாக பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை பகுதி முன்பு முடிவடைந்தது. அங்கு ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய மோடி அரசின் தொகுதி மறுவறையை நிராகரிக்க வலியுறுத்தி கண்டனம் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரிஜெக்டட் மோடி லிமிடேஷன் என்ற வாசகத்தோடு கையில் பதாகைகளையும் கருப்பு பலூன்களையும் ஏந்தியவாறு பேரணி மட்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் முகமது இப்ராஹிம், நகரத் துணைத் தலைவர் ரமேஷ் குமார், நகரச் செயலாளர் காஜா ஷெரீப், ஒருங்கிணைப்பாளர் ஜி ஆர் பூபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சையது பக்தோதின், நல்லதம்பி மாவட்ட துணை தலைவர்கள் ஆசைத்தம்பி, குழுமூர் பன்னீர் செல்வம், பூலாம்பாடி கந்தசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் கைகளத்தூர் துரை. சுப்பிரமணியன், வட்டார தலைவர்கள் பெரம்பலூர் சுந்தர்ராஜ், பூபதி, வேப்பந்தட்டை மேற்கு சின்னசாமி கிழக்கு சையது பக்தோதீன் வேப்பூர் வட்டாரத் தலைவர் செந்தமிழன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகமது மீரான், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார், மகளிர் வட்டாரத் தலைவி சந்திரா, ஐ என் டி எஸ் சி தலைவர் அய்யாசாமி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால், குரும்பலூர் கலியமூர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட, வட்டார, நிர்வாகிகள் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!