Perambalur: Deworming tablets for school students; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்கல் மாத்திரை 10.08.2026 அன்றும் 17.08.2026 அன்று விடுபட்டவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இம்முகாமில் 1 முதல் 19 வயதிலான குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிலான அனைத்து பெண்களுக்கும் ( கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) ஒரே நாளில் வழங்கப்படுகிறது.

1 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 வயது முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியரும், அங்கன்வாடி பணியாளர்களும் வீடு வீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,72,960 குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் 45,034 பெண்கள் பயனடைவார்கள். மேலும், பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் தன் சுத்தம் பற்றியும் திறந்தவெளியில் மலம் கழித்தல் தவிர்த்தல் பற்றியும் கை கழுவும் முறைகள் பற்றியும் நலக் கல்வி வழங்கவும் அங்கன்வாடி மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!