Perambalur: District DMK Commemoration of the Three Tamil Scholars! District In-charge V. Jagatheesan’s statement!

File Copy
பெரம்பலூர்: திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா எம்.பி.-யின் வழிகாட்டுதல்படி, மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 07.08.2026, வெள்ளிககிழமை காலை 9.00 மணியளவில், வேப்பந்தட்டையில் அமைதி ஊர்வலம் வந்து அங்குள்ள பேரறிஞர் அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதன் பின்னர், கிருஷ்ணாபுரத்தில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. காலை 10.30 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதில், மாநில நிர்வாகிகள், மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், திமுக முன்னோடிகள், உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.









kaalaimalar2@gmail.com |
9003770497