Perambalur: Police Search the people who stabbed a person who asked them to drink alcohol in a public place!

பெரம்பலூர் கடைவீதியின் மேற்குப் பகுதியில் உள்ள தெப்பக்குளம் பகுதியில் இன்று மதியம் பெரம்பலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சரவணன் (25) உள்பட 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரவணன் (30) என்பவர் அங்கு மதுஅருந்தக் கூடாது, இது பொது இடம் என தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சரணவன் (25) உள்ளிட்டோர், மற்றொரு சரவணனை கத்தியால் தாக்கியதுடன் உடலின் வெட்டியாக கூறப்படுகிறது. இதில் கைகள், முகத்தில் காயமடைந்த சரணவன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் டவுன் போலீசார் கத்தியால் வெட்டிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!