Opposition Leader Udhayanidhi Stalin being taken to Thanjavur via Perambalur; massive protest by DMK cadres; heavy police deployment; high tension!

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் நடந்த காவரி நீர் போராட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரபலமான பெண் ஒருவரை விமர்ச்சித்து பேசியதாக தவெக மகளிர் அணியினர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் சென்னையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்து வந்ததை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூரில், மாவட்ட தி.முக சார்பில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் அரசியலை செய்வதை கண்டித்தும், காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்தும் பாலக்கரை , புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.ராஜ்குமார், சி.ராஜேந்திரன், செ.நல்லதம்பி,டாக்டர் செ.வல்லபன்,அழகு.நீலமேகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்ப்ட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெரம்பலூர் வழியா தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்படுவதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் நகர், புறநகர் மற்றும் பெரம்பலூர் – அரியலூர் – தஞ்சாவூர் வழித் தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பெரும் பரபரப்பா உள்ளது. ஆனால், இன்று மாலைக்குள் போலீஸ் காவலில் இருந்து விடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










kaalaimalar2@gmail.com |
9003770497