Perambalur: Chief Minister Joseph Vijay inaugurated—via video conference—the Centre of Excellence workshop, a project established at a cost of ₹6.25 crore during the previous DMK administration; the Collector and the MLA inaugurated the facility by lighting the traditional lamp.

முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், உயர் கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா, பெரம்பலூர் எம்.எல்.ஏ சிவக்குமார் முன்னிலையில் கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள பெரம்பலூர் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் நேரலையில் பார்வையிட்டு, திறன்மிகு மைய பணிமனை கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். திறன்மிகு மைய பணிமனை ( Centre of Excellence / Industries 4.0) ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் மொத்த பரப்பளவு 1,407 சதுர மீட்டர். இதன் தரை தளத்தில் தர கட்டுப்பாட்டு அறை, உற்பத்தி அறை, வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டு அறை, பிளம்பிங் அறை, கார் லிப்ட், ஆட்டோ , பேட்டரி EV அறை , ரோபோடிக் அறைகளும், முதல் தளத்தில் சேவையக அறை PDD / PLM, IOT, VSAT மற்றும் AI / ML வகுப்பறை காணொளி அறைகளும் உள்ளன. 23 அதிநவீன பாட வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பணிமனை பயன்பாட்டின் மூலம் ஏற்கனவே உள்ள 5 பாடப்பிரிவுகள் உடன் கூடுதலாக 3 பாடப்பிரிவுகள் (Digital Manufacturing Technologies , Automation and Robotics, Internet of Things ) நடத்திட அனுமதி பெறப்பட்டு அதற்கான சேர்க்கைகள் நடந்து வருகிறது.

Industries 4.0 பணிமனை தொழில்துறை மற்றும் கல்விதுறை இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவித்து மாணவர்கள் உலக தொழில் நடைமுறையின் அனுபவத்தை பெற வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் தாசில்தார் பழனிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!