Perambalur: TVK government’s 2026-27 budget is a huge disappointment for farmers; statement by Neelakandan, District Secretary of the Tamil Nadu Farmers’ Association!

தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் நீலகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளின் முக்கிய எதிர் பார்ப்பான முழுமையான கடன் தள்ளுபடி பற்றி அறிவிப்பு இல்லை. கடுமையான உரவிலை, ஆட்கூலி , இதர இடு பொருள் செலவினங்கள் உயர்விற்கு ஏற்ப விவசாய விலை பொருள்களுக்கான கொள்முதல் விலை பற்றிய அறிவிப்புகள் எதுவும் இந்த வேளாண் நிதி நிலை அறிக்கையில் இல்லை. குறிப்பாக முக்கிய பயிர்களான கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு கொள்முதல் விலை அறிவிக்காதது பெரும் ஏமாற்றமாக உள்ளது.
தவெக தேர்தல் அறிக்கையில் கரும்பிற்கு டன் ஒன்றிற்கு ₹4500ம், நெல்லிற்கு குவிண்டாலுக்கு ₹3500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது (தவெக 2026 தேர்தல் அறிக்கை பக்கம்-43) தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக போதிய மழை இன்றி கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான நீர் இன்றி பயிர் சாகுபடி செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானமின்றி தவிக்கும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படாதது விவசாயிகளிடையே ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் முக்கிய மற்றுமொரு முக்கிய கோரிக்கையான தெலுங்கானாவில் வழங்கப்படுவது போல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சாகுபடி பரப்பிற்கு ஏற்ப நேரடி மானிய திட்டம் வழங்கிட அறிவிப்பு எதுவும் இல்லை. மொத்தத்தில் இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை வழக்கமான துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக உள்ளதே தவிர விவசாயிகளின் நலனுக்காக, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில் எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமளிக்கும் அறிக்கையாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.









kaalaimalar2@gmail.com |
9003770497