Perambalur; Gold chain snatched from sleeping woman: Husband slashed with sickle when he tried to stop her; Masked robbers rampage!

பெரம்பலூர் 4 ரோடு பகுதியில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள மங்களம் மஹால் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பாலமுருகன்- சண்முகப்பிரியா தம்பதியினர்.
பாலமுருகன் அரியலூரில் மருத்துவர் ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் நேற்றிரவு வழக்கம் போல் தங்களது குழந்தைகளுடன் வீட்டினுள் உள்ள ஒரு அறையில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில், வீட்டின் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற முகமூடி கொள்ளையர்கள் காட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சண்முகப்பிரியாவை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்து அவர் அணிந்திருந்த 5.5 சவரன் தங்க தாலி கொடியை பறித்தனர். இதனை அறிந்து சண்முகப்பிரியா எழுப்பிய அபய குரலை கேட்டு, அவரது கணவர் பாலமுருகன் எழுந்து சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தடுக்க முயன்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த செயின் பறிப்பு கொள்ளையர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் பாலமுருகனை வெற்றிப் பகுதியில் சரமாரியாக வெட்டினர். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நிலையில், தங்க சங்கிலியுடன் சம்பவ இடத்திலிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாலமுருகன்-சண்முகப்பிரியா தம்பதியினர் செயின் பறிப்பு சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன், பேரில்,

சம்பவ இடத்திற்குச் சென்ற பெரம்பலூர் போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நிகழ்ந்த செயின் பறிப்பும், அதனை தடுக்க முயன்ற கணவரை அரிவாள் வெட்டிய சம்பவம் பெரம்பலூர் புறநகர் பகுதி வாழ் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையில் ஆண் போலீசார் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. தனியார் செக்யூட்டிகளை வைத்தாவது பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!