Perambalur: Man stabbed for speaking out in support of brother in property dispute!

பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (45), விவசாய. இவர் மலையப்ப நகரில் . சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறார். இவரது தங்கை ஜானகி கணவர் கனகராஜுடன் அதே வசித்து வருகிறார். கனகராஜிக்கும், அவரது தங்கை ரத்தினகுமாரிக்கும் இடையே வரகுபாடியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை வைத்துக் கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் மைத்துனர் கனகராஜிக்கு ஆதரவாக வைத்திலிங்கம் பேசி வந்துள்ளார். இதனால் வைத்திலிங்கத்தும், ரத் தினகுமாரிக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வைத்திலிங்கம் தங்கியிருந்த வயலுக்கு சென்ற வந்த ரத்தினகுமாரியின் மகன் விக்னேஷ் (30) வைத்திலிங்கத்திடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைத்திலிங்கத்தை வெட்டி குத்தி தாக்கினான். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனை அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விக்னேசை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பி ஓடிய வாலிபர் விக்னேஷை கைது செய்த போலீசார் இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497