Perambalur: Milk producers’ stages protest with milch cows!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் பால் கொள்முதல் நிலையம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கிளை தலைவர் சாமிதுரை தலைமையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறவை மாடுகளுடன் ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில, பால் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி 45 ரூபாயாகவும், அரசு வழங்கும் ஊக்கத் தொகை 3 ரூபாயை 10 ரூபாயாக உயர்த்தவும், நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை உடனே வழங்கவும், 50 சதவீத மானிய விலையில் மாட்டுக் கொட்டகை, மாட்டுத் தீவனம், தீவனம் வெட்டும் மிஷின், பால் கறக்கும் மிஷின் வழங்கவும், பால் உற்பத்தியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.









kaalaimalar2@gmail.com |
9003770497