Perambalur: Minister Sivasankar inaugurated the distribution of Pongal gift packages to 193,921 families.

தமிழ்நாடு முதலமைச்சர், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் மற்றும் வேட்டி மற்றும் சேலைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி மற்றும் சேலைகள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இன்று முதல் டோக்கன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதற்காக 9.01.2026 நியாய விலைக் கடைகளுக்கு வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 1,93,921 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணியினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்தார். கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராஜ்குமார், துரைசாமி, கூட்டுறவு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497