Perambalur: MLA Prabhakaran patiently advised the Panchayat Clerk in the presence of officials! Don’t forget that we have come to serve the people!
பெரம்பலூர் மாவட்டம், து.களத்தூர் அருகே உள்ள நத்தக்காடு கிராமத்தில் தாட்கோ மூலம் 5 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதில் கலந்து கொள்ள கலெக்டர் மிருணாளினி, எம்.எல்.ஏ பிரபாகரன் சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ பிரபாகரனை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதனை அவர் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் ஒருவர் குடிநீர் மழைநீர் கலந்து வருகிறது, அதற்கு தங்களிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்து முறையிட்டு இருந்தோம் என தெரிவித்தனர்.
இந்த பிரச்சனை குறித்து உங்கள் ஊர் ஊராட்சி செயலர் ராஜாவிடம் சரிசெய்ய சொல்லி இருந்தேன். இன்னும் செய்யவில்லையா? என விசாரித்தார். அங்கிருந்த ஊராட்சி செயலாளர் ராஜாவிடம் ஏன் இப்படி காலம் தாழ்த்துகிறீர்கள், பொதுமக்கள் குடிநீர் பிரச்சனையை உடனுக்குடன் சரிசெய்வது நமது கடமை, நாம் பொதுமக்களுக்காக பணி செய்ய வந்திருக்கிறோம். ஒரே பிரச்சனையை எத்தனை முறை அதையே திரும்ப திரும்க உங்களுக்கு தெரியப்படுத்துவது, கொஞ்சம் சிரத்தையுடன் பாருங்கள் என அறிவுரை கூறினார்.ஆனால், அதற்கு ஊராட்சி செயலாளரோ எதிர்வாதம் செய்யத் தொடங்கினார். அருகில் இருந்து பிடிஓ பிரேமலதா அப்படி சொல்லக்கூடாது, சீக்கிரம் செய்து தருகிறேன் என சொல்லுங்க என அவரும் ஊராட்சி செயலருக்கு அட்வைஸ் செய்தார். சுத்தமான குடிநீர் வழங்க விரைவாக வழங்குவதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.