Perambalur: Mysterious persons broke the temple Hundi; also took away brass items!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் ஆலயம் உள்ளது. இதனை பெரம்பலூரை சேர்ந்த முருகன் மகன் இன்பராஜ் (47), பராமரிப்பு செய்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் பூட்டி விட்டு, இன்று காலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்துள்ளது. மேலும், உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் பக்தர்கள் செலுத்தி இருந்த சுமார் 2 ஆயிரம் ரொக்கம் மற்றும் வேல், காமாட்சி விளக்கு, குத்து விளக்கு போன்ற பித்தளையாலான பொருட்கள் களவு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இன்பராஜ் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி குற்றவாளிகள் விட்டு சென்ற தடயங்களையும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.











kaalaimalar2@gmail.com |
9003770497