Perambalur: Novel robbery; Mysterious people stole copper coil cylinders from a transformer using a power cut!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு பாராமரிப்பிற்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆலத்தூரில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் பழைய தார் பிளாண்ட் அருகே உள்ள டிரான்ஸ்பார்மில் இருந்து பராமரிப்ர் நேரம் முடிந்தும் மின்வினியோகம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகாரின் பேரில், மின்வாரிய ஊழியர்கள், மின்மாற்றியில் பழுது உள்ளதா? என பார்க்க சென்றனர். அப்போது, அந்த டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதி கழட்டப்பட்டு உள்ளே இருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 18 காப்பர் காயில் சிலிண்டர்கள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த அதிகாரிகள் மின்மாற்றியை பார்வையிட்டதோடு, இதுகுறித்து பாடாலூர் போலீசில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்து கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நூதன கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.











kaalaimalar2@gmail.com |
9003770497