Perambalur: On behalf of the district legal team, Perambalur, Kunnam Assembly Constituency BLA-2, consultative meeting! District DMK in-charge V. Jagatheesan’s statement!
பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி BLA-2, (வாக்குச்சாவடி நிலை முகவர்கள்), SIR(SPECIAL INDENSIND REVISION) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது . இதில் வழக்கறிஞர் அணி மத்திய மண்டல பொறுப்பாளர் சுவை.சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா.எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க, பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி BLA-2,(வாக்குச்சாவடி நிலை முகவர்கள்) SIR (SUSPENSION INDENSIND REVISION) ஆலோசனைக் கூட்டம், 09.10.2025, (வியாழக்கிழமை), மாலை 3.00. மணியளவில், எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் காடூர் பா.கவியரசு வரவேற்புரையில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் அணி மத்திய மண்டல பொறுப்பாளர் சுவை.சுரேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், முன்னாள் , இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் BLA-2(வாக்குச்சாவடி நிலை முகவர்கள்)உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.