Perambalur: Rice for November can be obtained from ration shops in October itself; Collector informs!
அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன் சர்க்கரை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாயவிலைக் கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாத ஒதுக்கீடான 12 – 35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாத அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெறாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12 -35 கிலோ அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும், நவம்பர் 2025 மாத அரிசியை அக்டோபர் 2025 மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம் போல் தங்களுக்குரிய அரிசியினை நவம்பர் மாதத்திலும் பெற்றுக் கொள்ளலாம். தமிழக அரசு அறிவித்துள்ள இந்த வசதியினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்தி பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.