Perambalur: Rs. 10 lakh subsidy to start a start-up business based on agricultural technology; Collector informs!
வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளுடன் துவங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகின்றது.
மதிப்பு கூட்டுதல், வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் சேமிப்பு காலத்தினை அதிகப்படுத்துதல், புதுமையான வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல், ஏனைய தொழில்நுட்ப தொழில் தொடங்கும் நபர்களும் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். நேரடியாக உண்ணும் தின்பண்டங்களுக்கு (Ready To Eat) இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க நிறுவனம் (TANSIM), அல்லது ஸ்டார்ட் அப் இந்தியாவின் (Startup India ) கீழ் பதிவு செய்தல் அவசியம். மேலும் அந்நிறுவனம் கம்பெனி சட்டம் 2013 அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். கூடுதலாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியான இலாபம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஒரு நிறுவனத்திற்கு அலகிற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு சந்தையை விரிவுபடுத்திட ஒரு நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் வணிகத்துறை துணை இயக்குநரை அலுவலகத்தை நேரிலோ அல்லது வட்டார அளவில் பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலரை 8608237057 என்ற எண்ணிலும், ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலரை 9361109874 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலரை 8248928648 என்ற எண்ணிலும், வேப்பூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலரை 6379080359 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.