Perambalur: School buildings in Nathakadu and Bommanappadi on behalf of THADCO at a cost of Rs. 2.27 crore: Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated them!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 137 கோடியே 31 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்கள், 39 கோடியே 29 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் 39 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டடங்களை வீடியோ கான்பிரன்ஸில் திறந்து வைத்தார்.

இதில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.72கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஒரு அறிவியல் ஆய்வகக் கட்டடம், பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வக கட்டடங்களை திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தில் குத்துவிக்கேற்றி இனிப்புகள் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், தாட்கோ தொழில்நுட்ப உதவியாளர் அருண், ஆலத்தூர் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், ஒப்பந்தாரர் துறையூர் சிவநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!