Perambalur: Scythe cut to famous rowdy: gang of 5 escapes! Police intensive investigation!!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில், ராம் தியேட்டர் அருகே 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, துறைமங்கலம் கே கே நகர் வினோத் என்ற பிரபல ரவுடியை வெட்டி விட்டு தப்பி ஓடியது.
வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், கேகே நகர் வினோத் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேகே நகர் வினோத் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.