Perambalur: Social activists demand that VCK leader Thol. Thirumavalavan’s birthday be included in daily calendars.

தென்னிந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்கள் போராடி வந்த நிலையில், நிகழ்காலத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடந்த சுமார் 30 ஆண்டுகளாக தனது படிப்பு வேலையெல்லாம் விட்டுவிட்டு போராடி வருகிறார். இவரால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தலைநிமிர்ந்து நிற்பது மட்டுமல்லாமல் கார்களில் கொடி கட்டிக்கொண்டு உயர் நிலைக்கு ஏற்றம் பெற்றுள்ளதும், கல்வி மருத்துவம் பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும் முன்னேற மக்கள் மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை குரல் கொடுத்து வருகிறார்.

மக்களை காலம் காலமாக அடிமையாக்கி வைக்கும் சனாதனத்தை எதிர்த்து குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், தனது செயலிலும் கொள்கையிலும் உறுதியாக நின்று அம்பேத்கர், பெரியார் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வலியுறுத்தி வருகிறார். மூடநம்பிக்கைகள் இருந்தும் சாதிய கட்டமைப்பிலிருந்தும், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக போராடும் இவருடைய பிறந்த நாளை தினசரி காலண்டரில் வரும் 2027 ஆம் ஆண்டு முதல் படத்துடன் இவரது பிறந்த நாளை குறிப்பிட வேண்டும் என அரசு காலண்டர் அச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எத்தனையோ தலித் தலைவர்கள் தோன்றினாலும் அவர்கள் வஞ்சத்தாலும் சூழ்ச்சியாலும் வீழ்ந்து இருந்தாலும் தனது கட்சியினரை தொல். திருமாவளவன் மட்டுமே சட்டமன்றத்தில் ஆட்சியில் பங்கு கேட்டு அமைச்சராக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!