Perambalur: Arumbavur Mariamman Chariot Festival! A large number of devotees pulled the chariot rope!

பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூரில் செல்லமுத்து மாரியம்மன் தேர்திருவிழா இன்று வெகுவிமரிசையா நடந்தது. கடந்த ஆக.2 (ஆடி.17 அன்று) பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கியது. ஆக.9 அன்று பால்குடம் எடுத்தல், காப்பு கட்டுதல், குடி அழைத்தல் நடந்தது. அடுத்தடுத்த நாட்களில் அலங்காரத்தில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தர். ஆக. 14 ஆடி வெள்ளியன்று அலகு குத்துதல், தீச்சட்டி , பொங்கல் மாவிளக்கு செய்து பூஜைகள் நடத்தப்பட்டது, நேற்று ஆரியமாலை, காத்தவராயன் திருமணம், கழுவு மரம் ஏறுதல் நடந்தது. இன்று காலை முக்கிய நிகழ்வாக தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்து, தேர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. நாளை மஞ்சள் நீராடல் மற்றும் தெருக்கூத்து நாடகத்துடன் திருவிழா நிறைவடைகிறது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.

இதில் அரும்பாவூர், மேட்டூர், கொட்டாரக்குன்று, மலையாளப்பட்டி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, கடம்பூர், பெரியம்மாபாளையம், கிருஷ்ணாபுரம், வெங்கலம், தொண்டைமாந்துறை, விஜயபுரம், அய்யர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!