Perambalur: Boy dies after accidentally stepping on a snapped power line during wind and rain.

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள விசுவக்குடியில் காற்று மழையின் போது அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் தவறுதலாக கால் வைத்த 10 ம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கியதில் பலியானார்.
அதே ஊரைச் சேர்ந்த அபுதாஹிர் என்வருக்கு சொந்தமான வயலில் மங்கலமேடு அருகே உள்ள முருகன்குடியை சேர்ந்த முருகேசன் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். முருகேசனின் மகன் சூர்யா( 15) அன்னமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். ந்நிலையில் இன்று காலை முருகேசன் அவரது மகன் சூர்யா இருவரும் தாங்கள் வேலை பார்க்கும் வயலுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்காக சென்றனர், அப்போது முதல் நாள் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், தேக்கு மர கிளை முறிந்து அந்தப் பகுதி வழியாக சென்ற மின்சார லையனில் விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது.
இதனை அறியாத சிறுவன் சூர்யா மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497