Perambalur: Kuthu Vilakku Puja at the Sri Madanagopala Swamy Temple (with Goddess Sri Maragathavalli Thayar)!

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபாலசுவாமி திருக்கோவிலில் இன்று (14/08/26) ஆடி கடைசி மற்றும் 5ம் வெள்ளியை முன்னிட்டு காலை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மாலை திரளான பெண்கள் சுமங்கலிகள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அதனை பின்தொடர்ந்து பெண்கள் குத்து விளக்குக்கு பூஜை செய்தனர். பின்பு, மங்கலவாத்தியம் முழங்க அனைத்து குத்து விளக்குகளுக்கும் மகா தீபாராதனை காண்பித்து சுமங்கலி பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னாள் தர்மகர்த்தா தெ.பெ. வைத்தீஸ்வரன், ஆன்மீக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூஜைகளை சக்கரவர்த்தி பட்டாச்சாரியார்கள் செய்து வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் செய்திருந்தார். பெரம்பலூர் ஆன்மீக மகளிர் அணியினர் உபயம் செய்திருந்தனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497