Tamil National Uprising Conference to be held in Ulundurpet on August 17; N. Krishnakumar, the District Secretary for the Perambalur Assembly constituency, has issued an invitation for people to participate in large numbers.

பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் ந. கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் “தமிழ்தேசிய எழுச்சி மாநாடு” நாளை மறுநாள் ஆக.17 அன்று உளுந்தூர்பேட்டையில் நடக்கிறது. இதில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர்.

இதில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மகளிர் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர்கள், முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தோழமை கட்சியினர், சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!