Perambalur: Two people, including a TVK functionary, die of electrocution; relatives besiege the Electricity Board office.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான குலதெய்வ கோயில் ஆகும். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற இருந்தது. அதற்காக அந்த கோவிலில் உள்ள சுமார் 20 அடி உயரம் உள்ள சகடையை (சிறிய அளவிலான தேர்) அலங்காரம் செய்து சாமியை ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக நேற்று இரவு ஏற்பாடு செய்தனர்.
அலங்காரம் செய்வதற்கான ஏற்பாடுகளை நன்னை தெற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் அண்ணாதுரை ( 42 ) (ஹோட்டல் உரிமையாளர்), கோவிந்தசாமி மகன் பரமசிவம் (42) (விவசாயி) ஆகியோர் செய்தனர். இவர்கள் இருவரும் சிறிய அளவிலான தேரை கோயிலை விட்டு வெளியே எடுத்து ரோட்டில் இழுத்து வந்தனர். அப்போது அந்தத் தேரை ஏரிக்கரை மேட்டில் இழுத்து செல்ல முயன்றனர். அப்போது இரவு நேரம் என்பதால் மேலே சென்ற போது எதிர்பாரா விதமாக உயர் மின்னழுத்த மின்சார கம்பியில் தேரின் உச்சியில் உள்ள கூம்பு பகுதி உரசியது. மின்சாரம் தேர் முழுவதும் பாய்ந்தது. தேரை இழுத்து வந்த தவெக மாவட்ட நிர்வாகி அண்ணாதுரை மற்றும் பரமசிவம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி பலியாகினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குன்னம் போலீசார் சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்விறாகாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் மின்வாரியம் சகடை செல்லும் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியை இழுத்துக் கட்டவில்லை, அதனால்தான் 2 பேர் மின்சாரம் தாக்கி பலியாகிவிட்டனர் எனக் கூறி அவரது உறவினர் வேப்பூரில் உள்ள மின்வாரிய அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதோடு, இழப்பீடு வழங்கவும் கோசங்கள் எழுப்பினர். கேட்க எவரும் இல்லாத நிலையில் அவர்களே கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.









kaalaimalar2@gmail.com |
9003770497