Perambalur: Direct admission camp for higher education; Collector’s announcement!

பெரம்பலூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2025 2026 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களில் உயர்கல்வி படிப்பில் சேராத மாணவ மாணவியர்கள் மற்றும் 10ஆம் தேர்ச்சி பெற்று 11 ஆம் வகுப்பு சேராத மாணவ மாணவியர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் உயர்கல்வி நேரடி சேர்க்கை முகாம் கலெக்டர் (தனது) தலைமையில் 18.08.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இரண்டாம் தளத்தில் நடைபெறுகிறது.

இம்முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி மையங்களில், நேரடிச் சேர்க்கை செய்யப்படும். மேலும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கல்வி கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களில் உயர்கல்வி படிப்பில் சேராத மாணவ மாணவியர்கள் மற்றும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், நேரடி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ்களுடன் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வகுப்பு சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவையுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!