Perambalur: Wildlife Week; Collector and MLA felicitate winners of awareness competitions by presenting prizes!

பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வனவிலங்கு வார விழாவானது அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டுகிறது. வனங்களில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பது நோக்கமாகும். இது குறித்து மாணவ,மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி 04.10.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விளைநிலத்தில் வனவிலங்குகளால் ஏற்பட்டு பாதிப்புகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக வேப்பந்தட்டை வனச்சரகத்திற்குட்பட்ட நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள த.கோபி என்பவருக்கு ரூ.2,500ம், கள்ளப்பட்டி, பூலாம்பாடி கிராமத்தில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு ரூ.4,500ம் வழங்கப்பட்டது,

மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், திருச்சி சர்வதேச விமானநிலைய ஆலோசனைக்குழு உறுப்பினரும், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும் டி.ஆர்.சிவசங்கர், வனச்சரக அலுவலர்கள் பா.பழனிகுமரன், க.சுதாகர், க.முருகானந்தன் வனவர்கள்,வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!