Perambalur: Women’s self-help groups can apply to run canteens in government colleges: Collector’s information!
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2025-2026 ஆம்; ஆண்டில், பெரம்பலூர் வட்டாரத்தில் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வேப்பூர் வட்டாரத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் உணவகம் நடத்தப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHGs), உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் அல்லது தொகுப்புகள,; உணவகங்கள் நடத்துவதற்க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவார்கள். விண்ணப்பதாரர் குழுவின் குடியிருப்பு அல்லது செயல்பாட்டுத் தளம் கல்லூரி வளாகத்திலிருந்து 5 முதல் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு, கூட்டமைப்பு, தொகுப்புகள் செயல்திறன் தர மதிப்பீடு விதிமுறைகளின் கீழ் Aஅல்லது B மதிப்பீடு பெற்ற குழுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். குறைந்தபட்சம் 6 முதல் 8 உறுப்பினர்கள் வரை உணவகத்தினை நடத்துவதற்கு இணைந்து செயல்படுத்த தயாராக இருக்க வேண்டும். உணவு தொடர்பான நிறுவனங்கள் உருவாக்குவதில் அல்லது நடத்துவதில் குழு, கூட்டமைப்பு, தொகுப்பு முன் அனுவம் பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடையவர்கள் 23.10.2025க்குள் சம்மந்தப்பட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பில் விண்ணப்பங்கள் பெற்று சமர்பிக்க வேண்டுமென கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.