Plastic Free Pollution Tamil Nadu- 2019; Awareness Rally in Namakkal
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு – 2019 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பைகளையும், விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கினார்.
இப்பேரணியானது நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கி மணிக்கூண்டு, திருச்சி ரோடு, ஸ்டேட் பேங்க், மோகனூர் ரோடு வழியாக சென்று தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது.
இப்பேரணியில் முதன்மை கல்வி அலுவலர் உஷா, நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் இன்ஜினியர் ஜெயலட்சுமி, குமாரபாளையம் உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ணன், நாமக்கல் உதவி பொறியாளர்கள் குணசேகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.