Public ask the collector to take action on those who are hampering the drinking water supply

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோண்வலசை ஊராட்சியிலிருந்து ராமநாதபுரம், கீழக்கரை பகுதி மக்களுக்கு குடிநீர் எடுத்து செல்வதற்கு சில சமுக விரோதிகள் இடையூறு செய்கின்றனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தக்கோண்வலசை கிராம மக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் கலெக்டர் நடராஜனிடம், நேற்று, சாத்தக்கோண்வலசை முன்னாள் கவுன்சிலர் சந்திரன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோண்வலசை ஊராட்சி மற்றும்நொச்சியுரணி ஊராட்சியிலிருந்து ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. சமீபகாலமாக சிலர் தண்ணீர் எடுப்பதற்கு இடையூறு செய்து பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இங்கு இருந்து ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்வதற்கு இடையுறாக உள்ள நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து ராமநராதபுரம் கீழக்கரை பகுதி மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க வழிவகுக்க வேண்டும், இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!