Public demands gradual cessation of government financial assistance to religious schools!
அரசு உதவி பெறும் பள்ளிகள் தமிழகம் முழுவம் இயங்கி வருகின்றன. இவற்றில் பெருபான்மையாக இருப்பவை மதம் சார்ந்து உள்ளது. இந்த பள்ளிகளில் மதம் குறித்து மறைமுகமாகவோ, நேரடியாகவோ போதிக்கப்படுகிறது. இதனால் மாற்று மதத்தை சேர்ந்த மாணவர்கள் மனதில் தாங்கள் சார்ந்திருக்கும் மதம் பற்றிய புரிதலில் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும், ஏற்றத் தாழ்வும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும் நிலை உள்ளது.
சமய சார்பற்ற நமது அரசு மக்கள் வரிப்பணத்தை அரசு பள்ளிகளுக்கு செலவிட வேண்டும். அதோடு, அரசு பள்ளிகள் நாளுக்கு நாள் தரம் உயர்த்தி வந்தாலும், மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. அரசு தமிழைத் தவிர அனைத்துப் பாடங்களையும் அனைத்து பள்ளிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்களின் வரிப்பணத்தை முறையாக அரசு பள்ளிகள் நடத்த செலவிட வேண்டும். மானியமாக அரசு உதவி பெறும் பள்ளிளுக்கு வழங்குவதால் அந்தந்த சமயங்களை சார்ந்த பள்ளிகள் மதங்களை வளர்க்க முனைப்பை காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசு சமயங்களுக்கு இடங்கொடுக்காமல், முற்போக்கு சிந்தனைகளுக்கும், அரசு பள்ளிகள் வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் இனி வரும் காலங்களில் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு நிதிகள் வழங்குவதை படிப்படியாக குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கையாக விடுக்கின்றனர்.