Zone Fuji pilgrims painted on the Ramanathapuram Vallabhai iyappa Temple


ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல புஜை ஐயப்ப பக்தர்கள் வர்ணம் புசியவாறு பேட்டை துள்ளியவாறு ஊர்வலமாக வந்தனர்.
ராமநாதபுரம் அருகே ரெருகநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் அனைத்து புைஜகள் அபிஷேகங்களும் இங்கு நடைபெறும். சபரிமலையில் நடைபெறும் மண்டல புஜை போன்று இங்கும் மண்டல புஜை சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான மண்டல புஜை கோ புஜையுடன் தொடங்கியது. அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து சிறப்பு புஜைகளும் காலை 8 மணிக்கு நுாற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் உடம்பில் கலர் வர்ண பொடியை புசி ஆடி பாடியவாறு பேட்டை துள்ளி சென்றனர். பின் ஐயப்ப கோயிலின் பின்புறம் உள்ள பஸ்மகுளதத்தில் ஐயப்ப ஆராட்டு விழா குருநாத சுவாமி மோகன் சாமி தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது. அதனை தொடர்ந்து ஐயப்பனுக்கு மகாஅபிஷேகமும் சிறப்பு அராதனைகளும் நடந்தது. பின் குருசாமி மோசன் சாமி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!