Ramanathapuram kowsanel arts College graduation ceremony

நம் வாழ்க்கையில் சட்டம் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றிபோய் உள்ளது. எனவே சட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், என, ராமநாதபுரம் கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி பேசினார்.

ராமநாதபுரம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கல்லுாரி செயலர் என்.எஸ்.சேசுதாஸ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்து மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ஹேமலதா வரவேற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி பட்டமளிப்பு விழா பேருரையில் பட்டம் வாங்கும் ஒவ்வொரு மாணவிகளும் பட்டம் வாங்குவதுடன் நின்றுவிடாமல் நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக நம் வாழ்க்கையில் சட்டம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வாடகை வீட்டில் வசிக்கும் போது வாடகை செலுத்துவதில் உள்ள சட்டம், கணவன் மனைவிக்கு இடையே, குடும்த்தினருக்கு இடைய உள்ள உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் சட்டம் எந்த மாதிரி தீர்வு காண்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை சட்டம் அவசியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.பெண்கள் சாதிக்க முடியும் என்பத நன்கு அறிந்து ஒவ்வொருவரும் சாதித்து காட்ட வேண்டும். எனக்கு தெரியும் நீங்கள் சாதிப்பீர்கள் என்று. நீங்கள் உறுதி ஏற்க வேண்டும், இவ்வாறு நீதிபதி கயல்விழி பேசினார்.

பின் இளங்கலை மாணவ மாணவிகள் 314 பேருக்கும், முதுகலை மாணவ மாணவிகள் 75பேருக்கும் என மொத்தம் 389 பேருக்கு நீதிபதி கயல்விழி பட்டங்கள் வழங்கி பாராட்டினார். பின் கல்லுாரி மாணவிகள் 30 பேர் பல்கலை அளவில் சாதனைபடைத்துள்ளனர் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

விழாவில் திரு இருதய சபையின் தலைவர் வேளாங்கன்னி ரவி, பொது செயலாளர் மற்றும் கல்வி பணியானை குழு தலைவர் கஸ்பார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி துணை முதல்வர் மகாலட்சுமி நன்றி தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!