Ramanathapuram Sugam Hospital Kalimuthu was awarded the Best Doctor award in Delhi

ராமநாதபுரம் மாவட்ட சுகம் மருத்துவமனை டாக்டர் காளிமுத்து டில்லியில் முப்படை தளபதிகள் பங்கேற்ற விழாவில் சிறந்த டாக்டருக்கான ஆஸ்கார் ஆப் ஹெல்த்கேர் அவார்ட் 2017க்கான விருது பெற்றார். விருது பெற்ற டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

டில்லியில் நடைபெற்ற விழாவில் இந்தியாவில் சிறந்த பாரம்பரிய மற்றும் ஆயுர்வேதம் துறையில் சிறந்து விளங்கிய டாக்டர்கள், ஆலோசகர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் முப்படை தளபதிகள் ராணுவ தலைமை தளபதி பிபின்ராவித், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவர், கடற்படை தளபதி சுனில்லன்பா, இந்திய உலக அழகி மானுஷி சில்லர் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுகம் மருத்துவமனை டாக்டர் காளிமுத்துவுக்கு சிறந்த பாரம்பரிய ஆயுர்வேத டாக்டருக்கான விருது வழங்கப்பட்டது. இவர் ராமநாதபுரத்தில் பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வதை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.

மேலும், ஆயுர்வேத சிகிச்சை முறையிலும் சிறந்த வைத்தியம் வழங்கி பல தீராத நோய்களுக்கு வைத்தியம் பார்த்து நோயாளிகளை நோய்களிலிருந்து காப்பாற்றியுள்ளார். இதுபோன்ற சிறந்த சேவைகள் செய்து வந்ததின் விளைவாக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் ராமநாதபுரம் பகுதியில் ஆயுர்வேத நவீன சிகிச்சை மையம் தொடங்க உள்ளார்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for NEWS - Kalaimalar.

error: Content is protected !!