Rowdy murder case clue; one side love affair, Bundled went off and killed in Perambalur.

கபிலன் உயிருடன் இருந்த போது எடுத்தப்படம்

பெரம்பலூரில் ரவடி கொலை வழக்கில் கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது. ஒரு தலைக் காதல் விவகாரத்தில் ரவுடி குண்டுகட்டாக தூக்கி சென்று கொலை செய்த 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஒரு கும்பல் குண்டு கட்டாக தூக்கி சென்று, சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் குத்தியதோடு, கழுத்தையும் அறுத்து விட்டதால் வாலிபர் உயிருக்கு போரடிக் கொண்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், பெரம்பலூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு குத்துயிராக, ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு, அங்கிருந்த வாகனம் மூலம், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்த நாரயணன் மகன் கபிலன் (வயது 27) என்பதும், அவன் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சமீபத்தில் வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரிய வந்தது.

நேற்றிரவு மதுபோதையில் இருந்த கபிலன் பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மைதானத்தில் குணசேகரன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அவரது குணசேகரன் வீட்டிற்கு வந்த கபிலன், அவரது சகோதரியிடம் (லாவண்யா) உன் தம்பி என்னை எதிர்த்து பேசுகிறான், அவனை சும்மா விடமாட்டேன் என தகராறு செய்தாக கூறப்படுகிறது. பின்னர் கபிலன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த குணசேகரின் மூத்த சகோதரி ரோகினியின் கணவர் அரவிந்த், உள்பட 10 க்கும் மேற்பட்டோர், சென்று போதையில் இருந்த கபிலனை குண்டு கட்டாக தூக்கி வந்து துறைமங்கலம் வி.ஏ.ஓ. அலுவலகம் அருகே வைத்து சராமாரியாக தாக்கி உள்ளனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், உடலில் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்து விட்டு சென்றனர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்துள்ளது.
இதில் குணசேகரன், அரவிந்த், கோபி, கார்த்திக், விஜய், சரண்ராஜ், ராஜேஷ், சுப்பிரமணியன், தனலட்சுமி, ஆனந்த் மற்றும் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரவிந்தனின் மச்சினிச்சியான லாவண்யாவை கபிலன் காதலிப்பதாக தகராறு செய்து வருவதை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த அரவிந்தன் உறவினர்களுடன் சென்று தீர்த்து கட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக 3 பேரை பிடித்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தலைமறைவாக பலரை தீவிரமாக தேடி வருகின்றனர். காதலால், ரவடி கொலையுண்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே குற்றத்தின் உண்மை பிண்ணனி என்ன என்பது தெரிய வரும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!