Sweets and snacks sold out on the very first day of the opening of the ‘Aswins Sweets and Snacks’ 2nd outlet in Hosur.

ஓசூரில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் சார்பில் 2வது கிளை நேற்று திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ் 2 வது கிளை பாகலூர் சாலை, ஆவலப்பள்ளி, ஹுட்கோ பேஸ்-6 பகுதியில் உள்ள பழைய சந்திரசேகரா மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிளையில் திறப்பு விழா அஸ்வின்ஸ் குழும நிறுவனர் கே.ஆர்.வி கணேசன் தலைமையில் நடந்தது. சி.இ.ஓ அஸ்வின், நிர்வாக இயக்குநர்கள் செல்வகுமாரி, டாக்டர் ஹம்ருத்தா, நிஷா, சிபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற உயரதிகாரி ஜனநாயகம் திறந்து வைத்தார். எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். கோவை ஒப்பந்ததாரர் மணிவண்ணன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் ஒசூர் உள்ளிட்ட சுற்று வட்டார முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இது அஸ்வின் நிறுவனத்திற்கு 45வது கிளையாகும்.

அஸ்வின்ஸ் கணேசன் கூறியதாவது: கடந்த 2003ம் ஆண்டு பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. திருச்சி, சேலம், சென்னை, திண்டுக்கல், ஆத்தூர், புதுச்சேரி, ஒசூர், துறையூர், லால்குடி, அரியலூர், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், விழுப்புரம், முசிறி, கரூர், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் சுமார் 45 கிளைகளுடன் இயங்கி வருகிறது. அத்துடன் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி, அரபு எமிரேட்ஸ், அரபு நாடுகள், ஓமன், கத்தார் போன்ற பல நாடுகளிலும் உள்ள முக்கிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் பதார்த்தங்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று அனைத்து வகையான அஸ்வின்ஸ் இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பலகாரங்கள் 50 சதவீத சிறப்பு தள்ளுபடியில் விற்பனை நடந்தது எனவும், கடை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வாங்கி பெரும் ஆதரவு கொடுத்ததால் அனைத்து விதமான அஸ்வின்ஸ் தயாரிப்புகளும் விற்றுத் தீர்ந்தன என்றும், அதற்கு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை ஒசூர் அஸ்வின்ஸ் நிர்வாக மேலாளர் சிபி, அஸ்வின்ஸ் மேலாளர் சூரி வெங்கடேசன், மனித வள மேம்பாட்டு அலுவலர் பார்த்தீபன், ஓசூர் கிளை ஊழியர்கள் உள்பட பலர் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!