The measures taken by the Chief Minister of Tamilnadu are appreciative: Minister Pon.Radhakrishnan

தமிழகத்தில் கஜா புயல் சம்பந்தமாக தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அரசு கடலோர காவல்படை மீனவர்களுக்கு புயல் சம்பந்தமாக உரிய எச்சரிக்கை கொடுத்ததனால் நூற்றுக்கணக்கான மீன் பிடிக்க சென்ற படகுகள் கரைக்கு திரும்பினர் கஜா புயல் சம்மந்தமாக மத்திய மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவித்த பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பிஜேபி அணி அதிக இடங்களில் ஜெயிக்கும் சில தலைவர்களை கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது வல்லபாய்படேல் எவருக்கும் குறைந்தவர் அல்ல நடிகர் ரஜினிகாந்த் செல்வாக்கு உள்ளவர் என தெரிவித்தார்.









kaalaimalar2@gmail.com |
9003770497