Woman killed in elephant clash incident in Karnataka laid to rest in Perambalur.

பெரம்பலூரை சேர்ந்தவர் ஜோயல் இவரது மனைவி ஜுன்ஸி (33) இவர்கள் கோடை விடுமுறைக்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் மாவட்டம், குடகு மலை பகுயில் உற்பத்தியாகும் காவிரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர் மேலும் அங்குள்ள காவிரி கரையின் அருகில் துபாரே யானைகள் முகாம் உள்ளது. அங்கு யானைகளுக்கு உணவளிப்பது, குளிப்பாட்டுவது போன்றவை நடப்பது வழக்கம்.

இதனைக் காண நேற்று இவர்கள் அங்கு சென்றுள்ளனர் அப்போது, யானைகள் முகாமில் உள்ள 27 யானைகள் காவேரி ஆற்றங்கரையில் குளிப்பாட்ட அழைத்துச் சென்றுள்ளனர். அதனை வேடிக்கை பார்க்க நேற்று சுற்றுலா பயணிகள் சூழ்ந்து இருந்தனர். அதில் எதிர்பாராத விதமாக கஞ்சன் என்ற யானை மார்த்தாண்டா என்ற யானைக்கும் ஏற்பட்ட மோதலில் மார்த்தாண்டா யானை சரிந்து கீழே விழும் போது அங்கே நின்று கொண்டிருந்த பெண் ஜுன்ஸி மீது யானை சாய்ந்தது இதில் யானைக்கு அடியில் சிக்கிய ஜூன்ஸி பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் இன்று பெரம்பலூரில் கிறித்துவ முறைப்பாடி உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுற்றுலா சென்ற இடத்தில் பெண் மீது, யானை விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!