சின்னமுட்லு நீர்த்தேக்கத்தை பார்வையிடும் மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை விசுவகுடியில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றார் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்கு உட்பட்ட அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடியில் ரூ. 33 கேடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கத்துக்கான கட்டுமான பணிகளையும், அண்மையில் பெய்த மழையால் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் அளவையும் கட்சி நிர்வாகிகளுடன் மருதைராஜா, எம்.எல். ஏ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் பார்வையிட்ட பின்பு அவர்கள் அளித்த கூட்டுப் பேட்டி:

பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 1.3.2011-ல் நபார்டு வங்கியின் உதவியுடன் ரூ. 19 கோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்து செம்மலை- பச்சமலை இடையே கல்லாற்றின் குறுக்கே விசுவக்குடி நீர்த்தேக்கம் கட்ட வேண்டுமென உத்தரவிட்டார். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மறு மதிப்பீட்டின்போது கூடுதல் நிதி தேவைப்படத்தன் காரணமாக 5.2.2015-ல் நபார்டு வங்கியின் உதவியுடன் அணைக்கட்ட ரூ. 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 665 மீட்டர் நீளமும், 12 மீட்டர் உயரமும் கொண்ட கரை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணையில், 40.65 மில்லி கன அடி தண்ணீரை தேக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 5.10.2015 முதல் பெய்த மழையால் 26.65. மீல்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. இங்கிருந்து வெளியேறும் உபரி நீரானது வெங்கலம் ஏரிக்கு சென்று, அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும். நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலமாக 200 ஏக்கர் புன்ஜை நிலமும் பயன்பெறும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மறைமுகமாக நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மூலமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் புன்ஜை நிலங்களில் விவசாயம் செய்யும் வகையில் அணை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடப்பட உள்ளது.

இந்நிலையில், அண்மையில் இந்த அணையை பார்வையிட்ட மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா திமுக ஆட்சியில் விசுவக்குடி நீர்த்தேக்கத்துக்கான திட்டம் கொண்டுவரப்பட்டது என தவறான தகவலை அளித்துள்ளார். இது, வன்மையாக கண்டிக்கதக்க விஷயமாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக பெரம்பலூர் தொகு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தமாவட்டத்துக்கு ரயில் திட்டம் கொண்டு வருவேன் என ராசா வாக்குறுதி அளித்தார். ஆனால், அதற்கான எவ்வித அடிப்படை பணிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.

பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டி:

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருக வேண்டும் என்ற உன்னத நோக்கில் 21.7.2005-ல் விசுவக்குடி நீர்த்தேக்கம் அமைக்க ரூ. 7.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே நோக்கத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற ஆ. ராசா எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென சட்டப்பேரவையில் தெரிவித்தவுடன் இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார். இதேபோல, மலையாளப்பட்டி அருகே சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தைம் நிறைவேற்ற, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, அந்த திட்டத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ், முன்னாள் துணை சபாநாயகா வரகூர் அ.அருணாசலம், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் எம்.என். ராஜாராம். ஒன்றியச் செயலர்கள் சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), என்.கே கர்ணன் (ஆலத்தூர்), மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் என். சேகர், முன்னாள் எம்.எல்.ஏ பூவை செழியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!