பெரம்பலூர்: ஆலத்தூர் அருகேயுள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி நாகம்மாள் (75). நேற்று செவ்வாய்க்கிழமை ஆடு மேய்க்க சென்ற நாகம்மாள் மாலை வரை வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதையறிந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த செல்வராஜீ என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இறந்து கிடந்தது இன்று புதன்கிழமை காலை தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். நாகம்மாளின் மகள் ராஜாமணி (48) கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.