Perambalur: District-level Meeting of the Atrocities Prevention and Vigilance Monitoring Committee!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் போலீஸ் எஸ்.பி லலித்குமார் முன்னிலையில் நடந்தது. இக்குழுவின் உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் மக்கள் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த கலெக்டர் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அடுத்த கூட்டத்திற்குள் அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகவழங்கப்பட்ட தீருதவி மற்றும் இதர நிவாரணங்களின் விவரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான வீட்டு மனை, சாதி மற்றும் இதர சான்றுகளை காலதாமதமின்றி வழங்கிட வேண்டுமென வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் வழங்குவது, ஒன்றிய மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும், வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களை அதிக அளவில் நடத்தி அதனை பொதுமக்களுக்கு எடுத்து செல்லவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

      இதில் டி.ஆர்.ஓ கண்ணன், ஆர்.டி.ஓ அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், சுவாமி முத்தழகன், தாட்கோ மாவட்ட மேலாளர் கவியரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!