Perambalur: Free Vocational Training for Men in CCTV, Mobile Phone Servicing, and House Wiring!

பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், ஆண்களுக்கான இலவச தொழில் நுட்ப பயிற்சி வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் அளிக்கப்பட இருக்கின்றது.
செல்போன் சர்வீஸ் (30 நாட்கள்), ஹவுஸ் ஒயரிங் (30 நாட்கள்), சி சி டி வி கேமரா (13 நாட்கள்), பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் பயிற்சிக்கான உபகரணங்கள், சீருடை, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதுடன், பொருளாதார உதவி பெற சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொடர்புடையவங்கிக்குபரிந்துரைக்கப்படுகிறது.
பயிற்சியில் சேருவதற்கான தகுதி, 19 வயதுக்கு மேல் மற்றும் 50 வயதுக்கு குறைவாகவும் , எழுத படிக்கதெரிந்தவராகவும்,சுயதொழில்தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கவேண்டும். ஆதார் அட்டை, வங்கி புத்தகம், சாதி சான்றிதழ் / மாற்று சான்றிதழ், பான் அட்டை, வறுமைக்கோடு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோவுடன் இணைத்து எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பதிவு செய்து கொள்ளவும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். 26-05-2026 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மையத்தின் இயக்குனர் வி.முருகையன் தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497