Perambalur: Special Grievance Redressal Meeting for Families of Ex-Servicemen; Collector Announces.

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் / அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நாள் 05.06.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 04.00 மணியளவில் கலெக்டர் (தனது) தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணி புரிபவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் அன்றைய தினம் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனு மற்றும் தொடர்புடைய ஆவணங்களை இரு பிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன் பெறுமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497