Perambalur: Jallikattu Contest in Visuvakudi; 602 Bulls and 334 Tamers Participate; 42 Injured!!

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள விசுவகுடி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்.டி.ஓ அனிதா வீரர்களை உறுதிமொழி ஏற்க செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வாடி வாசலில் இருந்து காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. ஆர்ப்பரித்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு அடக்கினர். அப்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பொதுமக்கள் கைதட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இதில் பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 602 காளைகள் பங்கேற்றன. இதில் 334 வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். இதில் அதிக காளைகளைப் பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 42 பேர் மாடு முட்டியதில் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் 6 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் அரும்பாவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!