Perambalur: Kalpana Chawla Award; Interested and eligible women may apply; Collector informs!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவின் போது தமிழக முதலமைச்சரால் துணிச்சலான மற்றும் வீர தீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது – 2026 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. இவ்விருது தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கத்துடன் ரூ.5,00,000/- ( ஐந்து இலட்சம்) ரொக்க பரிசும் வழங்கப்படும். இவ்விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண்ணாகவும், துணிச்சலான மற்றும் வீரதீர சாகச செயல்புரிந்திருக்க வேண்டும். எனவே, இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 19/06/2026 அன்று மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்து, பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர், தொலைபேசி எண் : 04328-296209. என்ற முகவரியில் அணுகி விண்ணப்பம் செய்த விவரத்தினை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!