Perambalur: Training classes for Group B and Group C staff recruitment; Collector’s announcement!

மத்திய அரசின் குரூப் பி, குரூப் சி பணியாளர் 12,256 காலிபணியிடங்களுக்குரிய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் SSC –CGL தேர்விற்கான நேரடி பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 18.06.2026 முதல் தொடங்கப்பட உள்ளது. 18 முதல் 32 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்த வேலை நாடுநர்கள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். பொது பிரிவினருக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்தப்பட வேண்டும்.

இதர பிரிவினருக்கு (பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் பிரிவினர்) தேர்வு கட்டணம் ஏதும் இல்லை. https//ssc.gov.in இணையதளம் வாயிலாக 22.06.2026 வரை இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். SSC –CGL முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நடைபெறும். பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

பணியாளர் தேர்வு வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். மாதிரி தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் பிரத்யேக இணையதளம் மெய்நிகர் கற்றல் தளம் மூலம் போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு பதிவு செய்து தரப்படும். போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி ஆகியவை மாதிரி தேர்வின் சிறப்பம்சங்கள் ஆகும். எனவே, போட்டி தேர்வில் ஆர்வம் உள்ளவர்கள் இலவச வகுப்புகள் மற்றும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!