Perambalur: Separate accidents; workers suffer crushed legs—one dead, another critically injured!

பெரம்பலூர் அருகே டூரிஸ்ட் பஸ் டயர் வெடித்து ஆசிட் ஏற்றி சென்ற லாரி மீது விபத்திற்குள்ளானதில், ஒருவர் பலத்த காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்
தெலுங்கானவை சேர்ந்த சுடூரிஸ்ட் பஸ் ஒன்று, ரமேஸ்வரம் சென்றுவிட்டு மீண்டும் தெலுங்கானவிற்கு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பெரம்பலூர் அருகே 4 அடுத்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங் அருகே சென்ற போது பஸ்சின் இடது புறம் உள்ள முன்பக்க டயர் தீடீரென வெடித்தது.
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பக்கவாட்டில் தூத்துக்குடியில் இருந்து சல்பரிக் ஆசிட் ஏற்றி வந்த லாரி மீது பேருந்து மோதி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரைக் தாண்டி சென்றது. இதில் பேருந்தின் ஓட்டுனர் தெலுங்கானா மாநிலம் கோதட்டம் சூரி பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணா என்பவர் பலத்த காயம் அடைந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 55 பயணிகளில் பத்துக்கு மேற்பட்டோருக்கு சிறு காயம் ஏற்பட்டது, மேலும் உள்ள பயணிகள் மற்றும் லாரி ஓட்டுநர் நாகப்பட்டினம் மாவட்டம் பாலக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து பேருந்து மற்றும் லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் அருகே சாலை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி ஒருவர் பலியானர்; மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள இரூர் – காரை பிரிவு சாலை சந்திப்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் மற்றும் சுரங்கபாதை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதன் காரணமாக முறையான சாலை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
சர்வீஸ் சாலையில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஜென்டியால் யாதவ் கிராம் மத்வாஸ் சித்தி மகன் ரவி யாதவ் (18), ஷிவ்யா யாதவ் மகான் மகன் சிவகுமார் யாதவ் (34), ஆகிய இருவரும் நேற்றிரவு ஆலத்தூர் கேட் சர்வீஸ் ரோட்டை கடக்க முயன்றனர்.
அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து அலறினர். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரவி யாதவ் என்பவருக்கு கால் நொருங்கியும் உள்காயம் ஏற்பட்டு இரவு இறந்துவிட்டார். மேலும் சிவகுமார் யாதவிற்கு இரு கால்கள் நொறுங்கியும், பெரம்பலூர் GHல் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவர் மேல் சிகிச்சைக்கா பெரம்பலூர் எஸ்.பி.டி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பபட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் தெற்கு கூத்தனூரை சேர்ந்த சதீஸ் என்பவருக்கு சொந்தமாக நாரணமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் செந்தூர் அசோசியேட்ஸ் குவாரியில் கல்குவாரில் ராட்சத பொக்லைன் ஆப்ரேட்டர்களாக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












kaalaimalar2@gmail.com |
9003770497